உடல் முழுவதும் எண்ணெய் தடவி குளிப்பது ஆரோக்கியத்திற்கு என்ன பலன்களை கொடுக்கும் என தெரிந்துக் கொள்வோம்.
சூரிய ஒளியில் எண்ணெய் குளியல் குளிப்பதன் மூலம் நம் உடலின் ஆற்றலை அதிகரிக்கவும், சருமத்தை சிறப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
சூரிய ஒளியில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் உடலில் கால்சியம் குறைபாட்டைக் குணப்படுத்தும். நரம்பு மண்டலம், தசைக்கூட்டு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
எள் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கலாம்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் கண், காது, மூக்கு, சருமம் போன்ற உறுப்புகள் வழக்கத்தை விட சிறப்பாக செயல்படும்.
எண்ணெய் குளியல் இரத்த ஓட்டத்தை தூண்டும். இது உடல் முழுவதற்கும் புத்துணர்ச்சியை அதிகரிக்கும்.