மணத்தாக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், எவ்வளவு நல்லது தெரியுமா? இதில் கொட்டிக்கிடக்கும் நன்மைகளை இங்கே காண்போம்.
மஞ்சள் காமாலையை தடுக்கும்
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தாக்காளி கீரையையை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இது கல்லீரல் தசைகளை பலப்படுத்தும்.
தொண்டை வலியை போக்கும்
உங்களுக்கு தொண்டை வலி இருந்தால், மணத்தக்காளி கீரையை சேர்த்துக்கொள்ளவும். இது வலியில் இருந்து நிவாரணம் தரும்.
மலச்சிக்கல் நீங்கும்
மணத்தக்காளி கீரையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் தீரும்.
காய்ச்சலுக்கான தீர்வு
மணத்தக்காளி கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி மற்றும் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது.
தோல் ஆரோக்கியம்
தோல் அழர்ஜி, எரிச்சல் போன்றவற்றை குணமாக்க மணத்தக்காளி கீரை உதவுகிறது.
நல்ல தூக்கம்
மணத்தாக்காளி கீரை பொடியை பாலில் கலந்து இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வருவதோடு உடல் சோர்வையும் தணிக்கும்.