லிச்சி பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சிறந்த மற்றும் சுவையான கோடைக்கால பழமாகக் கருதப்படுகிறது. இதில் லிச்சி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
உடல் எடையிழப்புக்கு
லிச்சி பழங்களில் குறைந்தளவிலான கலோரிகள் நிறைந்துள்ளது. அவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கவும் எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
லிச்சி பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
லிச்சியில் பாலிபினால்கள் எனப்படும் தாவர கலவைகள் நிறைந்துள்ளன. இவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு வீக்கம், மன அழுத்தம் மற்றும் பிற உடல் காரணிகளால் ஏற்படும் செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
லிச்சியில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைப்பதுடன், வறட்சியைத் தடுக்கிறது
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
லிச்சி ஒரு சிறந்த வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த மூலமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது