குமட்டிக்காயில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

By Devaki Jeganathan
28 May 2025, 10:24 IST

தர்பூசணி போல தோற்றமளிக்கும் சிறிய பலம் தான் குமட்டிக்காய். இதை நாம் தரிசு நிலம் மற்றும் சாலை ஓரங்களில் பார்த்திருப்போம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது மஞ்சள் காமாலை அபாயத்தை குறைக்கும் தன்மை உள்ளது. இதன் நண்மைகள் பற்றி பார்க்கலாம்.

இது களை அல்ல

பெரும்பாலும் தரிசு நிலங்களில் காணப்படும் குமட்டிக்காய் ஒரு களையாக கருதப்படுகிறது. ஆனால், இது பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்து என்பது உங்களுக்கு தெரியுமா? தர்பூசணியைப் போலவே இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. பல ஆரோக்கிய பிரச்சினைகளை குணமாக்கும்.

சர்க்கரை நோய்

குமட்டிக்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதில், சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மை உள்ளதால் இந்த பழத்தை உலர்த்தி பொடி செய்து, அதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

எடை இழப்பு

குமட்டிக்காய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த பழத்தின் விதைகளை அரைத்து பொடி செய்து, பழச்சாறு மற்றும் தண்ணீர் கலந்து சூடாக்கவும். தண்ணீர் பாதியாக வற்றியதும் வடிகட்டி பருகவும்.

நிமோனியா

குமட்டிக்காய் நிமோனியா அதாவது இரத்த சோகையை குணப்படுத்தும். இதற்கு குமட்டிக்காய் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் நிமோனியா நோய் குணமாகும்.

முடி பிரச்சனை

வழுக்கு குமட்டி காயின் சாற்றை தலைக்குத் தேய்த்தால், முடி உதிர்தல், பொடுகு, தலையில் அரிப்பு போன்ற தலை முடி பிரச்சனைகள் குணமாகும்.

மற்ற நன்மைகள்

குமட்டிக்காய் மன அழுத்தத்தை குறைக்கவும், சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு மற்றும் மூட்டுவலி வலியை குறைக்கவும் உதவுகிறது.