கோவக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்பட்டு வருகிறது. இதை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது
ஊட்டச்சத்து உள்ளடக்கம்
கோவப்பழங்களிலிருந்து பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றுக்களுக்கு தேவையான மருந்து தயாரிக்கப்படுகிறது. அதன் படி, மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
கோவக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து நாள்பட்ட நோய்களைத் தவிர்க்க உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
கோவக்காயில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், இதயத்திற்கு சரியான அளவில் இரத்தம் சென்று வரவும் உதவுகிறது
சர்க்கரை நோய்க்கு
நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வருவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறுவதைத் தடுக்க உதவுகிறது
உடல் எடை குறைய
கோவக்காய் ஆனது கொழுப்பைக் கரையக்கூடிய தன்மைகளைக் கொண்டுள்ளது. இது உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு மிகவும் நன்மை தரும்
செரிமான பிரச்சனைக்கு
உடலில் செரிமான அமிலங்கள் குறைவதால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனை ஏற்படலாம். இதற்கு கோவக்காய் உட்கொள்வது செரிமான பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
கோவக்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நோய்த்தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது