அரிசி வகைகள் ஏராளம் உள்ளது. அதில் ஒன்றாக கருப்பு கவுனி அரிசி உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருவதாகக் கூறப்படுகிறது. இது பெயருக்கு ஏற்ப கருமை நிறத்தில் காணப்படுகிறது
ஊட்டச்சத்துக்கள்
கருப்பு கவுனி அரிசியில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற சக்தி உள்ளது. இதனை ‘வெள்ளை’ அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம்
உடல் எடை மேலாண்மை
கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் உள்ளது. மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது
நீரிழிவு மேலாண்மை
ஆய்வில், கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
இதய ஆரோக்கியம்
இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளலாம்
தசை ஆரோக்கியத்திற்கு
வெள்ளை அரிசியுடன் ஒப்பிடுகையில், கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்துக்கள் உள்ளது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க
கருப்பு கவுனி அரிசியில் காணப்படும் ‘ஃபீனாலிக்’ என்ற கலவைகளில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது
பக்கவிளைவுகள்
கருப்பு கவுனி அரிசியில் ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் இருப்பதால் இதை அதிகளவு எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்