தானியங்களில் கம்பு மிகவும் முக்கியமானதாகும். இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களும், வேதிப்பொருள்களும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் கம்பு உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
நீரிழிவு நோயாளிகளுக்கு
கம்பு உட்கொள்வது நீரிழிவு இருப்பவர்களுக்கு சிறந்த பயனளிக்கும். இதில் குறைந்த கிளைசெமிக் தன்மை நிறைந்துள்ளது. மேலும் நார்ச்சத்துக்களும் உள்ளது. இதை நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்
பருவமடைந்த பெண்களுக்கு
பருவமடைந்த பெண்கள் கம்பு எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்த நன்மை பயக்கும்.மாதத்தில் நான்கு முறையாவது கம்பு கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
உடல் எடை குறைய
கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க சிறந்த தேர்வாக அமைகிறது. இது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து உடல் எடை குறைய வழிவகுக்கும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த
கம்பு இரத்தத்தை தளர்த்தி பிராணவாயுவை அதிகப்படுத்துகிறது. இது உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தை தூய்மையாக்கி உடலை ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது
தாய்ப்பால் சுரக்க
பிரசவத்திற்குப் பிறகு பலவீனமாக இருக்கும் பெண்கள் கம்பு எடுத்துக் கொள்வது தாய்ப்பால் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. மேலும், இது ஆற்றல் மிகுந்த சத்துகளை கொண்டிருப்பதால் உடல் சோர்வைக் குறைக்கிறது