நாவல் பழங்கள் ரத்த சர்க்கரை அளவை பெரிதும் குறைக்கக் கூடியது. இந்நிலையில், நாவல் பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிடும்.
ரத்த சோகை
வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த நாவல் பழம் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.
சரும ஆரோக்கியம்
நாவல் பழத்தின் துவர்ப்பு சுவை சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் நாவல் பழம் சாப்பிட்டால் சரும பொலிவு மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும்
கண் ஆரோக்கியம்
நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இது தோல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
பொட்டாசியம் நிறைந்த நாவல் பழம் உங்கள் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 100 கிராம் கருப்பு பிளம்ஸில் சுமார் 55 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதத்தை தடுக்கிறது.