அட முள்ளங்கி இலையில் இவ்வளவு விஷயம் இருக்கா?

By Kanimozhi Pannerselvam
28 Dec 2023, 09:14 IST

முள்ளங்கி இலைகள்

இதில் புரதம், சோடியம், இரும்பு, மெக்னீசியம், கார்போஹைட்ரேட் மற்றும் குளோரின் போன்ற ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் மூலமாகும்.

சரும பிரச்சனைகள்

முள்ளங்கி இலைகளை சாப்பிட்டு வர உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தலாம். இதனை உட்கொள்வதால் சருமத்தில் சொறி, அரிப்பு, பருக்கள் ஏற்படாது.

பைல்ஸ்

பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முள்ளங்கி இலைகள் ஒரு வரப்பிரசாதம். வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த இந்த இலை உடலின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

ரத்த அழுத்தம்

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், முள்ளங்கி இலைகள் உங்களுக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள சோடியத்தின் அளவு உடலில் உப்பு பற்றாக்குறையை ஈடுசெய்கிறது.

நோயெதிர்ப்பு சக்தி

முள்ளங்கி இலைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். ஏனெனில் இதில் இரும்பு மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.