பச்சை கொண்டைக்கடலை தரும் ஆரோக்கிய நன்மைகள்

By Gowthami Subramani
22 Sep 2024, 21:23 IST

பச்சை கொண்டைக்கடலை ஒரு தாவர அடிப்படையிலான புரோட்டீன்கள் நிறைந்த உணவாகும். இது தாவர அடிப்படையிலான உணவு உண்பவர்களுக்கு தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்க உதவுகிறது

எடையிழப்பை ஆதரிக்க

பச்சை கொண்டைக்கடலையில் குறைந்த கலோரிகள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் போன்றவை நீண்ட நேரம் முழுதாக உணர வைக்கிறது. மேலும் இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது

இரத்த சர்க்கரையை சீராக்க

பொதுவாக நார்ச்சத்துக்கள் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு அல்லது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பச்சை கொண்டைக்கடலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

பச்சை கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

மலச்சிக்கல்லைத் தடுக்க

இது அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடலியக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த

பச்சை கொண்டைக்கடலை கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸின் நல்ல ஆதாரமாகும். இது எலும்புகளை வலுவாக்கவும், எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த

பச்சை கொண்டைக்கடலையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி வயதாவதைத் தடுக்கிறது. இது ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை ஆதரிக்கிறது