உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் பாரம்பரிய உணவு வகைகளில் முளைகட்டிய பச்சைப்பயறும் அடங்கும். இதில் முளைகட்டிய பச்சைப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
முளைத்த பச்சைப்பயறில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் பி, சி போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலுக்குப் பல்வேறு விதமான நன்மைகளைத் தருகிறது
செரிமான மேம்பாட்டிற்கு
முளைத்த பச்சைப் பயறில் உள்ள சிக்கலான ஊட்டச்சத்துக்கள் எளிமையான பொருள்களாக உடைக்கப்பட்டு எளிதில் செரிமானம் அடைய வழிவகுக்கிறது. மேலும் இதில் செரிமானத்தை எளிதாக்க உதவும் ஏராளமான நொதிகள் நிறைந்துள்ளன
இரத்த சோகை நீங்க
முளைகட்டிய பச்சைப்பயறில் ஏராளமான இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையின் அறிகுறிகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
உடல் எடை இழப்புக்கு
முளைகட்டிய பச்சைப்பயற்றில் நிறைந்துள்ள அதிக நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் உடல் எடை இழப்பை விரும்பும் நபர்களுக்கு சரியான தேர்வாக அமைகிறது
எலும்பு ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை பராமரிப்பதோடு, உயிரணுக்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது
இரத்த சர்க்கரையைக் குறைக்க
முளைகட்டிய பச்சைபயிற்றில் வைடெக்சின் மற்றும் ஐசோவிடெக்சின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது