பல்வேறு நன்மைகளைக் கொண்ட வெந்தயத்தை, முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இது குறித்து இங்கே காண்போம்.
செரிமானத்தை மேம்படுத்தும்
முளைத்த வெந்தய விதையில் செரிமானத்திற்கு உதவும் நொதிகள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று உப்புசம், அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்னைகளை குணப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தலாம்.
இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல்
முளைத்த வெந்தய விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இவற்றை உட்கொண்டால் மிகுந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எடை இழப்புக்கு உதவும்
முளைத்த வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியதாக இருக்கும். உடல் எடையை குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
வெந்தயம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் நிறைந்த முளைத்த வெந்தயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.