இரவில் சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
05 Jan 2025, 15:02 IST

இரவு உணவில் புரதம் நிறைந்த சோயாபீன் எடுத்துக் கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மற்றும் இன்னும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் இரவில் சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

சோயாபீன்ஸ் வைட்டமின் கே, ஃபோலேட், இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. மேலும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் உள்ளது. இது தவிர சோயா பீன்ஸில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது

எடையைக் குறைக்க

எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய இரவு உணவுகளில் சோயாபீன்களும் அடங்கும். இதில் குறைந்த கலோரிகள் நிறைந்திருப்பதுடன், அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. எனவே இது உடல் எடையைக் குறைக்க சிறந்த தேர்வாக அமைகிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளடக்கம் நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தவும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

சோயாபீன்ஸில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க வழிவகுக்கிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தவும், முழுமை உணர்வுகளை அளிக்கவும் உதவுகிறது. சோயாபீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், இரவு உணவு செரிமானத்திற்கு திருப்திகரமானதாக அமைகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

சோயாபீன்ஸின் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைக்கலாம்