தினமும் வெறும் வயிற்றில் ஊறவைத்த பேரீச்சம்பழம் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் ஊறவைத்த பேரீச்சம்பழம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
உடல் எடையிழப்பு
பேரிச்சம்பழத்தில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குடலில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மெதுவாக்கி, உடல் எடையிழப்பை ஊக்குவிக்க உதவுகிறது
செரிமான மேம்பாட்டிற்கு
பேரீச்சம்பழத்தை ஓரிரவில் ஊறவைத்து உட்கொள்வது அதன் நார்ச்சத்துக்களை உடைத்து, எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது
இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு
காலையில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடலில் மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை சுத்தப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவுகிறது
எலும்புகள் வலுவாக
எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பேரீச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது
மூளை செயல்பாட்டிற்கு
தினமும் வெறும் வயிற்றில் ஊறவைத்த பேரீச்சம்பழம் உட்கொள்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது
மேம்படுத்தப்பட்ட ஆற்றல்
பேரீச்சம்பழம் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகளின் நல்ல மூலமாகும். இதனை உட்கொள்வது விரைவான ஆற்றல் மூலத்தை வழங்குகிறது
சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு
பேரீச்சம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு இயற்கையான பொலிவைத் தருகிறது