உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதில் பழங்கள், காய்கறிகள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பழங்களில் ஒன்றான ராஸ்பெர்ரி பழத்தைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
ராஸ்பெர்ரியில் வைட்டமின் சி, கே, மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது
இரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டிற்கு
ராஸ்பெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
இதய ஆரோக்கியம்
இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. மேலும், இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைத்து இதய பாதுகாப்பிற்கு உதவுகின்றன
செரிமான மேம்பாட்டிற்கு
இதன் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கவும், வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் இது ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஆதரிக்கிறது
எடை மேலாண்மைக்கு
ராஸ்பெர்ரியின் நார்ச்சத்துகள் முழுமை உணர்வைத் தருவதால், ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. இதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது
கண் ஆரோக்கியம்
ராஸ்பெர்ரியில் ஜியாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற சேர்மங்கள் நிறைந்துள்ளது. இவை கண் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், வயது தொடர்பான சிதைவின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
சரும ஆரோக்கியம்
ராஸ்பெர்ரியில் அதிகளவு வைட்டமின் சி உள்ளதால், இவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும், புற ஊதா சேதத்திலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமான சருமத்தைத் தருகிறது
புற்றுநோய்த் தடுப்பு
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், எலாஜிக் அமிலம் போன்றவை புற்றுநோயைத் தடுப்பதற்கான சாத்தியமான கூறுகளாகும். இந்த கலவைகள் புற்றுநோய் வளர்ச்சியைத் தூண்டும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது