காலை ராகி மட்டும் போதும்.. ஆளே அடையாளம் தெரியாம மாறிடுவீங்க!

By Karthick M
20 Oct 2024, 22:33 IST

காலை உணவாக ராகி சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. அந்த நன்மைகள் என்ன என்பதை இங்கே காண்போம்.

காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்பது மிக நல்லது. இதற்கு ராகி சிறந்த தேர்வு. ராகியில் புரதம் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

ராகியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் காலையில் ராகி உணவை சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். இதனால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.

ராகி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது ஒரு உணவு எவ்வளவு விரைவாக இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதைக் குறிக்கிறது.

ராகியில் கால்சியம் நிறைந்துள்ளது. இதை தினமும் சாப்பிட்டால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கிறது.

ராகியில் அமினோ அமிலங்கள் அதிகம். அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன. இது இதய ஆரோக்கியத்தை வலுவாக்கும்.