அன்றாட உணவில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதில் கீரை பெரிதும் உதவுகிறது. இதில் பொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது என்பது குறித்து காணலாம்
கண் பார்வை மேம்பாட்டிற்கு
கண்களில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி மற்றும் வெண்படல அழற்சியை குணப்படுத்த பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது. இந்த கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண் இமை வீக்கத்தை குணமாக்கும்
உடல் உஷ்ணம் நீங்க
பொன்னாங்கண்ணி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை உச்சந்தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வரை வைத்திருத்து, பின் ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசி வந்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கலாம்
ஆஸ்துமா
ஆஸ்துமா மற்றும் தொடர் இருமல் போன்றவை குணமாக பொன்னாங்கண்ணி சாற்றை ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களுடன் சேர்த்து சாப்பிடலாம்
எடை அதிகரிக்க
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் பொன்னாங்கண்ணி இலையை துவரம் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சாப்பிடலாம்
தலைவலி நீங்க
அடிக்கடி தலைவலி மற்றும் தலைசுற்றல் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் பொன்னாங்கண்ணி இலையை கசக்கி நுகர்ந்து பார்க்கலாம்
பற்களின் வலிமைக்கு
பொன்னாங்கண்ணி கீரையில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமை கிடைக்கிறது