தினமும் அன்னாச்சிப்பழம் சாப்பிடுவது உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. இதை தினசரி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
சிறந்த செரிமானத்திற்கு
அன்னாசிப்பழம் உட்கொள்வது செரிமானத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள புரோமிலைன் புரதங்களை உடைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அன்னாச்சிப்பழத்தை வழக்கமாக உட்கொள்வது வீக்கம், வாயு மற்றும் பிற செரிமான கோளாறுகளை குறைக்கிறது
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
அன்னாசிப்பழத்தில் நிறைந்த வைட்டமின்கள் சி ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானதாகும். தினமும் அன்னாசிப்பழம் சாப்பிடுவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம் உடலில் நோய்த்தொற்று, சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கலாம்
கண் ஆரோக்கியத்திற்கு
அன்னாசிப்பழத்தில் உள்ள அதிக அளவிலான வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை கண்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஏனெனில் இவை கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவுக்கு வழிவகுக்கலாம்
வீக்கத்தைக் குறைக்க
அன்னாச்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ப்ரோமைலைன் போன்றவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது சைனசிடிஸ், கீல்வாதம் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும்
எலும்புகள் வலுவாக
தினமும் அன்னாசிப்பழத்தை உட்கொள்வது ளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள மாங்கனீசு வலுவான எலும்புகளை பராமரிக்கவும், எலும்பு அடர்த்தியை ஆதரிக்கவும் உதவுகிறது
நீர் தேக்கத்தைத் தடுக்க
அன்னாசியில் கை டையூரிடிக் பண்புகள் நிறைந்துள்ளது. இது அதிகப்படியான திரவம் மற்றும் சோடியத்தை உடலில் இருந்து அகற்றவும், தண்ணீர் தேங்குவதைத் தடுக்கவும் உதவுகிறது. இது வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து, சுருக்கங்கள், கோடுகளைக் குறைக்கிறது