பைன் மரங்களிலிருந்து அறுவடை செய்யப்படும் சிறிய மற்றும் சுவையான விதைகளே பைன் நட்ஸ் என அழைக்கப்படுகிறது. இது அதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நலனுக்காக அறியப்படுகிறது
எடை மேலாண்மை
பைன் கொட்டைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை உள்ளது. இவை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கிறது
நீரிழிவு நோய்க்கு
பைன் கொட்டைகளில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இவை நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
பைன் கொட்டைகளில் பினோலெனிக் அமிலம் உள்ளது. இது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் நிறைவுறா கொழுப்புகள் ஆரோக்கியமான சுழற்சி மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
கண் ஆரோக்கியத்திற்கு
பைன் கொட்டைகளில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை கிளைகோமா மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகிறது
ஆற்றல் ஊக்கியாக
பைன் கொட்டைகள் மாங்கனீசு, புரதங்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை ஆற்றலை மேம்படுத்தி, உடல் சோர்வை நீக்குகிறது
முதுமை எதிர்ப்புக்கு
பைன் கொட்டைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது. இது வயதான செயல்முறையை தாமதப்படுத்த உதவுகிறது