கோடைக்காலத்தில் இனிப்பு, ஜூஸி மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீச் பழங்கள் சாப்பிடுவது புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது. இதில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகளைத் தரும் என்பதைக் காணலாம்
எடை கட்டுப்பாட்டிற்கு
பீச் பழத்தில் குறைந்த அளவிலான கலோரிகள், அதிகளவிலான நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உட்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், அதிக கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது
நீரேற்றமாக இருக்க
89% அளவுக்கு நீர்ச்சத்துக்கள் கொண்ட நிறைந்த பழமாக பீச் பழம் அமைகிறது. இது கோடை வெயிலில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
பீச் பழம் பொட்டாசியம் நிறைந்ததாகும். இவை உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
பீச் பழம் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழமாகும். இவை உடலில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
பீச் பழம் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை உடலில் மலச்சிக்கலைப் போக்கவும், குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது
சருமத்தை பிரகாசமாக வைக்க
பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதுடன், சரும அமைப்பை மேம்படுத்துகிறது