பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பழமாகும். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இன்னும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன
இதய ஆரோக்கியத்திற்கு
தினசரி உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவை இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது
வீக்கத்தைத் தடுக்க
பப்பாளி ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இவை உடலில் வீக்கம் ஏற்படுவதைக் குறிக்க உதவுகிறது
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த
உடலில் வளர்சிதை மாற்றத்தின் போது ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரெ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது
புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள்
பப்பாளி பழத்தில் உள்ள லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது
செரிமான மேம்பாட்டிற்கு
பப்பாளியில் பப்பேன் என்ற நொதி காணப்படுகிறது. இது புரதச் செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும் எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு பப்பாளி பெரிதும் உதவுகிறது
சரும சேதத்திலிருந்து பாதுகாக்க
பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. முகச்சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது