கொய்யாப்பழம் அதிக மருத்துவ நன்மைகள் கொண்ட பழமாகும். இதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன
சரும பொலிவுக்கு
கொய்யாப்பழத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை சருமப் பொலிவைத் தருகிறது. இது சருமத்தின் சுருக்கங்களைக் குறைக்கவும், கண் கோளாறுகளை நீக்கவும் உதவுகிறது. மேலும் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது
உடல் எடையைக் குறைக்க
கொய்யாப்பழம் கொழுப்புச் சத்து குறைவான பழமாகும். இவை பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
இருமல் குணமாக
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இருமலைக் குணப்படுத்தவும், சளித் தொல்லையைப் போக்கவும் உதவுகிறது
மலச்சிக்கல் குணமாக
இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது
நீரிழிவு நோய்க்கு
கொய்யாப்பழச் சாறு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் வேர், இலைகள் மற்றும் பட்டை போன்றவை நீரிழிவு நோய்க்கு சிறந்த தேர்வாக அமைகிறது