தாமரை விதை
மக்கானா என்றழைக்கப்படும் தாமரை விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மேலும் இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் தாமரை விதைகள் தரும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்
ஊட்டச்சத்துக்கள்
இதில் மிகவும் சக்தி வாய்ந்த வைட்டமின்கள், மினரல்கள் போன்றவை நிறைந்துள்ளன. மேலும் அதிகளவு மக்னீசியம், பாஸ்பரஸ், புரோட்டீன், பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு கொலஸ்ட்ராலும் நிறைந்துள்ளது. எனவே இவை ஆரோக்கியமான சிற்றுண்டியாகக் கருதப்படுகிறது
எலும்புகளை வலுவாக்க
மக்கானாவில் மக்னீசியம், கால்சியம் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவை எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இதனுடன் பற்கள் மற்றும் மூட்டு பிரச்சனை போன்ற நிலைமைகளைச் சரி செய்யவும் உதவுகிறது
உடல் எடையைக் குறைக்க
மக்கானா அதிகளவு புரோட்டீன் மற்றும் குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டதாகும். இவை உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த
இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் மக்கானாவை உட்கொள்வதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்
செரிமான பிரச்சனைக்கு
மக்கானாவில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, அஜீரணக் கோளாறை போக்குவதற்கு உதவுகிறது. எனவே அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் மக்கானாவை தினமும் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
இதய ஆரோக்கியத்திற்கு
மக்கானாவில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இவை அதிக இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை சீராக்கி மாரடைப்பு போன்ற அபாயம் ஏற்படுவதைத் தடுக்கிறது