மக்கானா சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
02 Sep 2024, 08:23 IST

மக்கானா ஃபாக்ஸ் நட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது மெக்னீசியம், கால்சியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த சக்தி வாய்ந்த மையமாகும். இந்த மக்கானாவின் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

எடையிழப்புக்கு

எடையைக் குறைக்க மக்கானாவை உட்கொள்ளலாம். இதில் குறைந்த கலோரிகள், அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் முழுமையாக உணர வைப்பதுடன், நாள் முழுவதும் திருப்தியை அளிக்கிறது

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க

தினசரி வழக்கத்தில் மக்கானாவைச் சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

மக்கானாவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்தும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த

மக்கானா ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மூலமாகும். இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதுடன், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது

கீல்வாதத்தைத் தடுக்க

கீல்வாதம் அல்லது பிற மூட்டுப் பிரச்சனைகளைக் கையாள்பவர்களுக்கு மக்கானா சிறந்த தேர்வாகும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் விறைப்பைக் குறைக்க உதவுகிறது. இவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

முதுமை எதிர்ப்புப் பண்புகள்

மக்கானாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளது. இவை சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் தோற்றத்தைக் குறைத்து, சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது