கற்பூரவல்லி இலை சாப்பிட்டால் இந்த நோய் எல்லாம் குணமாகும்!

By Devaki Jeganathan
15 May 2025, 22:32 IST

கற்பூரவல்லி இயற்கையிலேயே மருத்துவ குணம் நிறைந்த ஒரு சிறந்த மூலிகை பொருள். இதன் இலைகள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை தீர்க்கும் பண்பு கொண்டது. இதன் பயன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

கற்பூரவல்லி பெரும்பாலான வீடுகளில் பரவலாக காணப்படும் செடி. இது பல பிரச்சனைகளில் இருந்து விடுபட நமக்கு உதவும். இதில் உள்ள பண்புகள் அஜீரணம், மலச்சிக்கல், அமிலத்தன்மை, எடை இழப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

சளி மற்றும் இருமல்

மாறிவரும் காலநிலை காரணமாக சளி, இருமல் போன்ற நோய்கள் அடிக்கடி வருகின்றன. இதற்கு கற்பூரவல்லி இலைகளின் சாற்றை தலை மற்றும் மார்பில் தடவலாம். இது மூக்கடைப்பு மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

பூச்சி கடி

பூச்சி கடித்திருந்தால் கற்பூரவல்லி இலைகளின் சாறு தடவலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. சிறிய காயங்களில் கூட இது பயனுள்ளதாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி கற்பூரவல்லி இலைகளில் காணப்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் மற்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.

வலி நிவாரணம்

கற்பூரவல்லி இலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. கீல்வாத வலியையும் இதைப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம்.

வயிறு பிரச்சினை

கற்பூரவல்லி இலைகளின் சாறு வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது. இதனை உட்கொள்வதால் அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படாது.

காய்ச்சல்

உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், கற்பூரவல்லி இலைகள் உதவியாக இருக்கும். இதன் இலைகளை சாறு செய்து குடித்தால் காய்ச்சல் குறையும். ஏனெனில் இதில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.