எலும்பை இரும்பாக்கும் கடுகு கீரை தரும் நன்மைகள்

By Gowthami Subramani
10 Dec 2024, 19:56 IST

கடுகு கீரை பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிக்க உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய கீரை வகையாகும். இதில் கடுகு கீரை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

இந்த இலை கீரையில் வைட்டமின் ஏ, பி6, சி, ஈ மற்றும் கே, இரும்பு, தாமிரம், புரதம், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது

இதய ஆரோக்கியத்திற்கு

கடுகு கீரை ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்ததாகும். இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

செரிமானத்தை மேம்படுத்த

இந்த இலை கீரையில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் மலச்சிக்கல்லைத் தடுக்கவும் உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

கடுகு கீரையில் அதிகளவு வைட்டமின் சி காணப்படுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், சளி மற்றும் பிற நோய்த்தொற்றுக்களைத் தடுக்கிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

கடுகு கீரையில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. குறிப்பாக, குளிர்காலத்தில் எலும்புகளை வலிமையாக்கவும், பராமரிக்கவும் உதவுகிறது

கண் ஆரோக்கியத்திற்கு

இந்த கீரையில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இவை கண் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் ஆகும்