கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வாக தேன் சாப்பிடலாம். இதில் கோடை வெப்பத்தில் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்க
தேனில் உள்ள பண்புகள் உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை நீர், தேன் கலந்து குடிக்கலாம்
எடையைக் குறைப்பதற்கு
தேனில் உள்ள பண்புகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது
இதய ஆரோக்கியத்திற்கு
தேனில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது
ஆற்றலை வழங்குவதற்கு
தேனில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது கோடைக்காலத்தில் சோர்வு, பலவீனத்தை நீக்கி உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்க உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
தேனில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில்நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
தேனில் உள்ள பல்வேறு ஆரோக்கியமிக்க பண்புகள் கோடைக்காலத்தில் ஏற்படும் பலதரப்பட்ட சரும பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வை வழங்குகிறது
நல்ல தூக்கத்திற்கு
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது நல்ல, சீரான இரவு தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது