பூண்டு மற்றும் வெல்லம் இரண்டுமே ஏராளமான மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகும். இது உடலின் பல்வேறு பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது. இதில் பூண்டு, வெல்லம் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
எடை இழப்புக்கு
பூண்டு, வெல்லம் இரண்டையும் உட்கொள்வது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடல் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுவதன் மூலம் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது
நீரிழிவு நோய்க்கு
பூண்டு நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையைத் தரக்கூடியதாகும். அதே சமயம், வெல்லம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
வெறும் வயிற்றில் பூண்டு, வெல்லத்தைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
இந்த இரண்டு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருள்களைத் தொடர்ந்து உட்கொள்வது வாயு, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
பூண்டு மற்றும் வெல்லத்தை ஒன்றாக உட்கொள்வது பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளே காரணமாகும்
இருமல் நிவாரணத்திற்கு
பூண்டை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடுவது இருமலை விரைவாகக் குணப்படுத்த உதவுகிறது
எப்படி சாப்பிடலாம்?
காலையில் வெறும் வயிற்றில் வெல்லத்துடன் இரண்டு பல் பூண்டு சேர்த்து சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
குறிப்பு
பூண்டு மற்றும் வெல்லம் கலவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கர்ப்பிணி பெண்கள் போன்றோர் இதை உட்கொள்வதற்கு முன்னதாக சுகாதார நிபுணரை அணுக வேண்டும்