மீன் தலையை விரும்பி சாப்பிடுவீங்களா? - அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!
By Kanimozhi Pannerselvam
16 Apr 2025, 22:13 IST
மூளை ஆரோக்கியம்
மீன் தலையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. அடிக்கடி மறதியால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக மீன் தலையை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறைவான கொழுப்பு
மற்ற இறைச்சி பொருட்களுடன் ஒப்பிடும்போது மீன் தலையில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. எனவே, அதை சாப்பிடுவது உங்கள் கொழுப்பின் அளவை அதிகரிக்காது.
இன்றைய காலகட்டத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மீன் தலைகளை தவறாமல் சேர்த்துக் கொண்டால், சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
நீரழிவு நோய்
மீன் தலையில் உள்ள பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காரணமாக நீரிழிவு மற்றும் மூட்டுவலி நோயாளிகளுக்கும் இது நன்மை பயக்கும்.
கண் பிரச்சனைக்கு தீர்வு
வாரம் ஒரு முறை மீன் தலை சாப்பிடுவது கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. இது லேசான பார்வை இழப்பு மற்றும் இரவு குருட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும்.