பிஸியான நாளுக்கு பின் நாம் நிம்மதியாகவும், பொறுமையாகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவது இரவு உணவைத்தான். இரவு உணவை தூங்க செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிட வேண்டும்.
சிறந்த செரிமானம்
தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை சாப்பிடுவதால், உணவு செரிமானம் ஆவதற்கான போதிய நேரம் உடலுக்கு கிடைக்கும். அஜீரணம், அமில ரிஃப்ளக்ஸ் (ம) அசௌகரிய பிரச்சனைகள் ஏற்படாது.
சிறந்த தூக்கம்
தூங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் உணவு உண்டால் அது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால், உணவுக்கு செரிமானம் ஆவதுடன் நல்ல உறக்கம் வரும்.
எடை குறைப்பு
இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது டயர் மற்றும் விரதம் இருப்பதற்கு சமம். இதனால், உங்கள் உடல் எடை சரியாக பராமரிக்கப்படும். மேலும், உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
சுறுசுறுப்பாக இருப்பீர்கள்
இரவு உணவை சீக்கிரம் உண்பதால், உங்களுக்கு மாலையில் அதிக ஆற்றல் கிடைக்கும். தாமதமான இரவு உணவு உங்களை சோர்வாகவும் கனமாகவும் வைக்கும்.
இரத்த சர்க்கரை அளவு
சரியான நேரத்தில் இரவு உணவை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். நீங்கள் சாப்பிட்ட கார்போஹைட்ரேட்டுகளை மேம்படுத்தி, உடலில் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
சரியான ஊட்டச்சத்து
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது உங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை முழுவதும் பெற உதவும். செரிமானத்திற்கு போதிய நேரம் உடலுக்கு கிடைப்பதால், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
மாரடைப்பு ஆபத்து
நாம் தூங்கும் போது இரத்த அழுத்தம் கிட்டத்தட்ட 10% குறைந்து, உடலுக்கு ஆய்வு தரும். எனவே, இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்புக்கான அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோய்
தாமதமாக இரவு உணவை உட்கொள்வது டைப்-II நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. டைப்-II நீரிழிவு நோய், உடலால் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்படுகிறது. இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால், உடலில் இன்சுலின் அளவு சரியாக மேம்படுத்தப்படும். இதனால், டைப்-II நீரிழிவு நோய் ஆபத்து குறையும்.