பேரிச்சம்பழத்தை குளிர்காலத்தில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இங்கே காண்போம்.
கதகதப்பாக வைத்துக்கொள்ளும்
குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான வெப்பத்தை பேரிச்சம்பழம் வழங்குகிறது. இதன் இயற்கை சர்க்கரை, ஆரோக்கியமான சுவையை தருகிறது.
சளியை தடுக்கும்
குளிர்காலத்தில் சளித் தொல்லை இருந்தால், 2-3 பேரீச்சம்பழம், சிறிது மிளகு, 1-2 ஏலக்காய்களை இரண்டு கிளாஸ் தண்ணீரில் எடுத்து கொதிக்கவிடவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் இதை குடிக்கவும். இது குளிர்ச்சியைக் குறைக்க உதவுகிறது.
ஆஸ்துமாவை குறைக்கும்
குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று ஆஸ்துமா. தினமும் காலை மற்றும் மாலை 1-2 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை குறையும்.
மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குளிர்காலத்தில் வளர்சிதை மாற்றம் குறையும் போது இது நன்மை பயக்கும். செரிமான அமைப்பு சரியாக இயங்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. இது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
இதய ஆரோக்கியம்
குளிர்காலத்தில் உடலின் வெப்பம் குறையும். இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. இது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமின்றி, மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயமும் குறைகிறது.
மூட்டுவலிக்கு நல்லது
குளிர்காலத்தில் வலிகள் அதிகரிக்கும். கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும். பேரிச்சம்பழத்தின் வலி நிவாரணி குணங்கள், இவற்றை ஓரளவு குறைக்கின்றன. இதில் உள்ள மக்னீசியம் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.