குளிர்காலத்தில் சோள மாவு சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
22 Dec 2023, 16:17 IST

குளிர்காலத்தில் சோளமாவு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் சோளமாவு தரும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்

ஊட்டச்சத்துக்கள்

சோளமாவில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பி-காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. மேலும், இதில் இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை உள்ளது

வெப்பத்தைத் தர

சோளம் வெப்பத் தன்மை கொண்டுள்ளதால், இந்த மாவை குளிர்காலத்தில் சாப்பிட்டு வர உடல் சூட்டைத் தணிக்கலாம். இவை சாப்பிட சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்

செரிமான மேம்பாட்டிற்கு

சோள மாவில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. மேலும் இவை வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு

சோளமாவில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது இன்சுலின் ஸ்பைக்கைத் தடுக்கிறது

தைராய்டு பிரச்சனைக்கு

இதில் வைட்டமின்கள், செலினியம், பீட்டா கரோட்டின் போன்றவை காணப்படுகின்றன. மேலும் சோளமாவில் குளூட்டனின் அளவு குறைவாக இருப்பதால் தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

கர்ப்பிணி பெண்களுக்கு

சோளமாவில் உள்ள ஃபோலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கும், புதிதாகப் பிறந்த தாய்மார்களுக்கும் நன்மையைத் தருகிறது. கூடுதலாக, இதில் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் மற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன

இவ்வாறு பல்வேறு வழிகளில் சோள மாவு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. எனவே குளிர்காலத்தில் மக்காச்சோள மாவை எடுத்துக் கொள்ளலாம்