செலரி விதை சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
05 Feb 2025, 17:12 IST

செலரி செடியில் உள்ள சிறிய, பழுப்பு நிற விதைகள் ஒரு மசாலாவாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை சூப்கள், ஊறுகாய், குழம்புகள் மற்றும் சாலடுகள் போன்றவற்றில் சேர்க்கலாம். இது உணவின் சுவையை அதிகரிப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த செலரி விதைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

செரிமான ஆரோக்கியத்திற்கு

செலரி விதைகளில் உள்ள பண்புகள் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது வழக்கமான குடல் இயக்கங்களுக்கு உதவுவதற்கும், மலச்சிக்கலைத் தடுப்பதற்கும், நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை ஊக்குவிப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க

நீரிழிவு நோயாளிகளுக்கு செலரி விதைகள் மிகுந்த நன்மை பயக்கும். ஆய்வு ஒன்றில் செலரி விதை சாறு நீரிழிவு எலிகளில் ஹைப்பர் கிளைசீமியாவை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறப்படுகிறது

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த

இந்த விதைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உடலில் உள்ள செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கவும் உதவுகிறது

சிறுநீர் பாதை தொற்றுக்களைத் தடுக்க

செலரி விதைகள் இயற்கையான டையூரிடிக் ஆகச் செயல்பட்டு, சிறுநீர் கழிப்பதன் மூலம் அதிகப்படியான நீர் மற்றும் நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. இந்த டையூரிக் பண்புகள் வீக்கம் மற்றும் நீர் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது

மூட்டு வலியைக் குறைக்க

செலரி விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் பண்புகள் காரணமாக இது கீல்வாதம் போன்ற ஒரு வகை அழற்சி மூட்டுவலி போன்ற நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு உதவுகிறது

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

செலரி விதைகள் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்களின் நல்ல மூலமாகும். இதில் துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவை உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுக்களைத் திறம்பட எதிர்த்துப் போராடவும் உதவுகிறது