கருப்பு நிற பீன்ஸை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சில ஆரோக்கியமான மாற்றங்களைப் பெறலாம். அன்றாட உணவில் கருப்பு பீன்ஸ் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்துகள்
கருப்பு பீன்ஸில் ஃபோலிக் அமிலம், காப்பர், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், புரதம், வைட்டமின் பி1 மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் நிறைந்து காணப்படுகின்றன
நீரிழிவு நோய்க்கு
கருப்பு பீன்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்புகள், கொலஸ்ட்ரால் போன்றவை இல்லை. இவை இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
இதில் அதிகளவு பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இவையே உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாகச் செயல்படுகின்றன
உடல் எடை இழப்புக்கு
கருப்பு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், இவை பசியைக் கட்டுப்படுத்தி எடை இழப்பை ஊக்குவிக்கிறது
இதய ஆரோக்கியத்திற்கு
இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்டகொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது