பீட்ரூட் மட்டுமல்லாமல் பீட்ரூட் இலைகளும் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் பீட்ரூட் இலைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
பீட்ரூட் இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதை உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
செரிமானத்தை மேம்படுத்த
பீட்ரூட் இலைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
பீட்ரூட் இலைகளில் அதிகளவிலான பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வீக்கத்தை எதிர்த்துப் போராட
பீட்ரூட் இலைகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
பீட்ரூட் இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உடலை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க வழிவகுக்கிறது
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த
இந்த இலைகளில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் போன்றவை உள்ளது. இது உடலில் எலும்புகளை வலுப்படுத்தவும் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
கண் ஆரோக்கியத்திற்கு
பீட்ரூட் இலைகளில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை நல்ல கண் பார்வை ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன், வயது தொடர்பான பிரச்சினைகளிலிருந்தும் கண்களைப் பாதுகாக்க உதவுகிறது