கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருப்பது அவசியம். இதற்கு அவகேடோ சிறந்த தேர்வாகும்
அவகேடோ பழம்
கோடையின் கடுமையான வெப்பத்தில் அவகேடோ பழத்தை உட்கொள்வது குளிர்ச்சி, நீரேற்றம் மற்றும் ஆற்றலைத் தருகிறது. இதில் கோடையில் அவகேடோ பழம் தரும் நன்மைகளைக் காணலாம்
எலக்ட்ரோலைட் இருப்பு
வெண்ணெய் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் வெப்ப காலநிலையில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கலாம். வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் வெண்ணெய் பழத்தில் பொட்டாசியம் அதிகளவு உள்ளது
நீரேற்றமிக்க பழம்
அவகேடோ பழத்தில் சுமார் 73% அளவு நீர் நிறைந்துள்ளது. இது கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைக்க சிறந்த தேர்வாக அமைகிறது. உணவில் வெண்ணெய் பழங்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் தினசரி திரவ உட்கொள்ளலைப் பெறலாம்
ஆற்றல் ஊக்கியாக
வெண்ணெய் பழத்தில் வைட்டமின் பி6, சி மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை நீடித்த ஆற்றலை வழங்குகிறது. மேலும் இவை கோடையில் வெப்பத்தால் ஏற்படும் சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது
சூரியக்கதிர்களிலிருந்து பாதுகாப்பு
வெண்ணெய் பழத்தில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது
குளிரூட்டும் பண்புகள்
வெண்ணெய் பழம் குளிர்ச்சியான பண்புகளைத் தருகிறது. இதன் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காரணமாக உடல் புத்துணர்ச்சி அடைவதுடன், உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது