அகத்திக் கீரை என்ற பெயரிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளது. அகம், அதாவது உடலின் உள்ளே இருக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் அகத்திக் கீரை என்று பெயர் பெற்றது. எண்ணற்ற நன்மைகளைக் கொண்ட அகத்திக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
அகத்திக் கீரையில் வைட்டமின் ஏ, சி, புரதம், கால்சியம், இரும்பு , பாஸ்பரஸ் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது
சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு
அகத்தி கீரையை உணவில் தொடர்ந்து சேர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கும் கணையத்தின் சேதமடைந்த செல்களை சரிசெய்வதற்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
அகத்தி கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களின் ஆக்ஸிஜனேற்றத்திற்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைத் தவிர்க்கிறது
உயர் இரத்த அழுத்தத்திற்கு
உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை கொண்டிருப்பவர்கள், வாரத்திற்கு ஒரு முறையாவதூ அகத்தின் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்
உடல் வெப்பம் குறைய
அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்கலாம். இது கண்களைக் குளிர்ச்சியாக வைக்கிறது. மேலும் இதன் மூலம் நீரிழப்பு மற்றும் பித்த மயக்கத்தைக் குணமாக்கலாம்
தொண்டைப் புண் நீங்க
தொண்டை புண், தொண்டை வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிடலாம். இதன் மூலம் தொண்டை புண், வலி பிரச்சனை குணமாகும். மேலும், இது வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கவும் உதவுகிறது