பூண்டு ஊறவைத்த தண்ணீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் பூண்டு தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
இதய நோய்
தினமும் காலையில் பூண்டு தண்ணீரைக் குடிப்பது ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் மாரடைப்பு போன்ற பல்வேறு இதய பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது
வயிற்று பிரச்சனைகள்
தினமும் பூண்டு தண்ணீரை குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மேலும் இது அஜீரணம், வயிற்றுவலி, வாயுப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
இருமல், சளி நீங்க
பூண்டு தண்ணீரில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் இருமல் மற்றும் சளியைத் தடுக்க உதவுகிறது
பாக்டீரியாவை எதிர்த்துப் போராட
பூண்டில் உள்ள ஆன்டிபயாடிக் பண்புகள் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் போன்றவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது
குடல் ஆரோக்கியத்திற்கு
கேம்பிலோபாக்டர் பாக்டீரியா முக்கியமாக உணவு மூலம் குடல் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா ஆகும். இதனைத் தவிர்க்க ஆன்டி பயாடிக் பண்புகள் நிறைந்த பூண்டு உதவுகிறது
எப்போது குடிக்கலாம்
பூண்டை தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது கொதிக்கும் நீரில் சேர்த்தோ எடுத்துக் கொள்ளலாம். இதை தினமும் வெறும் வயிற்றில் அருந்துவது நல்ல பலன்களைத் தருகிறது
குறிப்பு
உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யும் முன்பாக நிபுணர்களைக் கலந்தாலோசித்து எடுத்துக் கொள்வது நல்லது