ராஸ்பெர்ரி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரானது ராஸ்பெர்ரி இலை டீ எனப்படுகிறது. இது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இந்த தேநீர் அருந்துவது பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் ராஸ்பெர்ரி இலை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
ராஸ்பெர்ரி இலை டீயில் டானின்கள் உள்ளது. இவை வயிற்றுப்போக்கு அல்லது லேசான வயிற்று வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தணிக்க உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
ராஸ்பெர்ரி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த தேநீரில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
ராஸ்பெர்ரி இலைகளில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும், காலப்போக்கில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது
மாதவிடாய் அசௌகரியத்தைத் தணிக்க
இது இயற்கையான தசை தளர்வு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த தேநீர் அருந்துவது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள், வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது
சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்க
இந்த மூலிகை தேநீர் சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்க உதவுகிறது. இது அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுவதன் மூலம் நீர் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது
இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு
ராஸ்பெர்ரி இலை தேநீர் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவை மாதவிடாய் காலத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது