புதினா நீர், பெருஞ்சீரக நீர் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பானங்களாகும். ஆனால், இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தயார் செய்யப்படும் பானம் உண்மையில் பல நன்மைகளைத் தருகிறது. இதில் புதினா பெருஞ்சீரக நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
நீரேற்றமாக வைத்திருக்க
புதினா மற்றும் பெருஞ்சீரகம் கலந்த நீர் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், புதினாவில் உள்ள மெந்தோல் ஆனது கோடைக்காலத்தில் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது
புத்துணர்ச்சியூட்டும் சுவாசத்திற்கு
மிளகுக்கீரை மற்றும் பெருஞ்சீரகம் இரண்டுமே இயற்கையாகவே சுவாசத்தைப் புத்துணர்ச்சியாக்கும் திறனுக்காக நன்கு அறியப்படுகிறது. இதன் மூலம் நாம் அதிக புத்துணர்ச்சியைப் பெறலாம்
வீக்கத்தைக் குறைப்பதற்கு
பெருஞ்சீரகம், புதினா இரண்டும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இவை உடலுக்குள் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
செரிமானத்தை மேம்படுத்த
பெருஞ்சீரகம் உட்கொள்வது செரிமான அமைப்பின் தசைகளை தளர்த்தி, அதன் மூலம் வீக்கம் மற்றும் வாயு உருவாவதைக் குறைக்கிறது. அதே சமயம், அதேசமயம் புதினா வயிற்றை குளிர்வித்து தளர்வுறச் செய்து, செரிமான செயல்முறையை சீராக வைத்திருக்க உதவுகிறது
நச்சு நீக்கத்திற்கு
இவை இரண்டையும் உட்கொள்வது உடலை நச்சு நீக்க உதவுகிறது. ஏனெனில், இது இயற்கையான டையூரிடிக் ஆகச் செயல்பட்டு, உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
புதினா மற்றும் பெருஞ்சீரகம் இரண்டும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகும். இவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது. இதன் மூலம் முகப்பருவைக் குறைப்பதுடன், சருமத்தைப் பிரகாசமாக்கலாம்
எப்படி செய்வது
இந்த பானத்தைத் தயார் செய்வதற்கு, 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் சில புதிய புதினா இலைகளைச் சேர்க்கலாம். இதை சில நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு வடிகட்டி சூடாகவோ அல்லது குளிராகவோ குடிக்கலாம்