வெறும் வயிற்றில் சீரகத்தண்ணீரை இப்படி எடுத்துக்கிட்டா எந்த பிரச்சனையும் வராதாம்

By Gowthami Subramani
18 Jan 2024, 18:13 IST

இந்திய மசாலா பொருள்களில் ஒன்றான சீரகம், பாரம்பரிய மருந்துகளில், அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது

சீரகத்தின் ஊட்டச்சத்துக்கள்

சீரகத்தில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, ஈ மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் இரும்பு போன்ற தாதுக்கள், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதில் நார்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன

செரிமான மேம்பாட்டிற்கு

சீரகம் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டும் கலவைகளைக் கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் அருந்துவது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவியாக இருக்கும்

எடை மேலாண்மைக்கு

எடை நிர்வாகத்தில் சீரகம் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உடல் எடை குறைய விரும்புபவர்கள் ஜீரா தண்ணீரைக் குடிக்கலாம். இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது

நச்சுக்களை நீக்க

சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன், நச்சுக்களை அகற்ற உதவுகிறது

சுவாச ஆரோக்கியத்திற்கு

காலையில் வெறும் வயிற்றில் ஜீரா தண்ணீர் அருந்துவது இனிமையான விளைவை ஏற்படுத்தும். இவை பாரம்பரிய மருத்துவ முறைகளில் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

அழற்சி எதிர்ப்பு விளைவுகள்

சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் பல்வேறு நோய்களால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த தண்ணீர் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது

ஜீரகத் தண்ணீர் தயாரிக்கும் முறை

சீரகத்தை சுமார் 5-10 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைத்து, அதை அறை வெப்பநிலையில் குளிர்விக்க வேண்டும். பின் சீரகத்தை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். விரும்பினால் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்