தினமும் 1 டம்ளர் வெள்ளரி ஜூஸ் மட்டும் குடித்து பாருங்கள்!

By Karthick M
21 Mar 2024, 02:20 IST

வெள்ளரி சாறு நன்மைகள்

வெள்ளரி சாறு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தும்.

நிறைந்துள்ள சத்துக்கள்

வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே, மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் வெள்ளரிக்காயில் இருக்கிறது.

உடல் நச்சு நீங்கும்

தினமும் 1 டம்ளர் வெள்ளரி சாறு குடிப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். அதேபோல் உடலில் சேரும் அழுக்குகள் வெளியேறும்.

கொலஸ்ட்ரால் குறையும்

கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு ஆகச்சிறந்த நன்மை பயக்கும். அதேபோல் உடல் எடை குறையவும் இது உதவுகிறது. நீரிழிவு நோயாளிக்கும், செரிமான அமைப்புக்கும் இது நன்மை பயக்கும்.