கருப்பு காபியில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் பி2 மற்றும் பி3, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சோடியம் போன்றவை உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது
நாள்பட்ட நோய்களின் அபாயத்திற்கு
குளோரோஜெனிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் கருப்பு காபியில் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவது, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைத் தவிர்க்கிறது
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு
கருப்பு காபியை மிதமாக உட்கொள்வது கல்லீரல் புற்றுநோய், கொழுப்பு கல்லீரல் நோய், சிரோசிஸ் போன்ற அபாயத்தைக் குறைக்கலாம். இது வீக்கத்தைக் குறைத்து தீங்கு விளைவிக்கும் கல்லீரல் நொதிகளின் உருவாக்கத்தைத் தடுக்கிறது
அறிவாற்றல் செயல்பாட்டிற்கு
கருப்பு காபியில் உள்ள காஃபின் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது. இது கவனத்தை செலுத்துகிறது. மேலும் மன தெளிவை மேம்படுத்துகிறது. இது அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களின் அபாயத்தைத் தவிர்க்கிறது
நீரிழிவு நோய்க்கு
இது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
வளர்ச்சிதை மாற்றத்திற்கு
இதிலுள்ள காஃபின் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இது கொழுப்பு எரியும் விகிதத்தை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சியின் போது உடல் செயல்திறனை மேம்படுத்துகிறது