அர்ஜூனா பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
16 Jan 2025, 17:19 IST

நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் அர்ஜூனா பட்டை ஆயுர்வேதத்தில் ஒரு பழங்கால ஆயுர்வேத மருந்தாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு பலதரப்பட்ட நன்மைகளைத் தருகிறது. இதில் அர்ஜூனா பட்டை ஊறவைத்த தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

எடை மேலாண்மைக்கு

அர்ஜூனா பட்டை தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை திறம்பட நிர்வகிக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

இந்த பானம் அருந்துவது சுழற்சியை மேம்படுத்தவும், இதய தசைகளை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான கொழுப்பின் அளவை பராமரிக்கவும் உதவுகிறது. இவ்வாறு இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

அர்ஜூனா பட்டை நீர் செரிமான அமைப்பை அமைதிப்படுத்துகிறது. இதன் மூலம் அசிடிட்டி மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

அர்ஜூனா பட்டை நீரில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட வழிவகுக்கிறது

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த

இந்த பட்டையானது இயற்கை சேர்மங்களால் நிறைந்ததாகும். இவை இரத்த நாளங்களை தளர்த்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது

வீக்கத்தைக் குறைக்க

அர்ஜூனா பட்டை பானம் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகும். இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் தரவும் உதவுகிறது

எவ்வாறு தயாரிப்பது?

இரண்டு கப் அளவிலான நீரில் ஒரு டீஸ்பூன் அர்ஜுன் பட்டை பொடி அல்லது பட்டையை எடுத்துக் கொண்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். சிறந்த நன்மைகளைப் பெற இந்த பானத்தை வடிகட்டி, சூடாக எடுத்துக் கொள்ளலாம்