தினமும் கற்பூரவள்ளி இலை நீர் குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

By Gowthami Subramani
27 Feb 2024, 08:28 IST

கற்பூர்வள்ளி இலைகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன

கற்பூரவள்ளி இலை நீர்

இந்த கற்பூரவள்ளி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர பல்வேறு நன்மைகள் கிடைக்கும்

சளி, இருமல் பிரச்சனைக்கு

இந்த இலைகளில் உள்ள பண்புகள் தைமால் நோய்த்தொற்றுக்களை நீக்குகிறது. இந்த கற்பூரவள்ளி இலைகள் கலந்த நீரைக் கொதிக்க வைத்து குடித்து வர சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

செரிமான ஆரோக்கியத்திற்கு

கற்பூரவள்ளி இலைகளை வேகவைத்து குடிப்பது மலச்சிக்கல், அமிலத்தந்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருவதுடன் செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

பல் வலிக்கு

இந்த இலைகளில் உள்ள வலி நிவாரணி குணங்கள் பல் வலியில் இருந்து நிவாரணம் தருகிறது. இதற்கு கற்பூரவள்ளி இலைகளைக் கொதிக்க வைத்து குடிக்கலாம்

சுவாச பிரச்சனைக்கு

மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு கற்பூரவள்ளி இலைகளை இடித்து, அந்த வாசனையை நுகர்வதுடன், கொதிக்க வைத்த இந்த இலை நீரைக் குடித்து வர விரைவில் நிவாரணம் பெறலாம்