கறிவேப்பிலை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
19 Sep 2024, 21:05 IST

கறிவேப்பிலை பொடி உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் கறிவேப்பிலை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

செரிமான ஆரோக்கியத்திற்கு

கறிவேப்பிலை உட்கொள்வது செரிமான நொதிகளைத் தூண்டி, அஜீரணத்தைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மலச்சிக்கலை போக்க உதவுகிறது

இரத்த சுத்திகரிப்பாளராக

கறிவேப்பிலையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இது ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இது இயற்கையான இரத்த சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

கறிவேப்பிலையில் கார்டியோ-பாதுகாப்பு பண்புகளைக் கொண்ட ரூடின் மற்றும் டானின்கள் போன்ற கலவைகள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது பல்வேறு நோய்த்தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது

கண் ஆரோக்கியத்திற்கு

கறிவேப்பிலை வைட்டமின் ஏ நிறைந்த நல்ல மூலமாகும். இது கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்

கூந்தல் ஆரோக்கியத்திற்கு

கறிவேப்பிலை பொடியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புரதம் போன்றவை முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும், முடி உதிர்தலைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது