கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?

By Kanimozhi Pannerselvam
23 Apr 2025, 21:25 IST

இளநீரின் நன்மைகள்

இளநீரில், வைட்டமின்கள், மினரல்கள், எலக்டோலைட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், உடலில் எலெக்ரோலைட்டுகள் சீராகின்றன.

வயிற்றுப் பிரச்சனை

காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வருவது, வயிறு பிரச்சினைகளை தீர்க்கிறது. வயிற்றில் அல்சர் இருந்தாலும் தொற்று இருந்தாலும் அதை குணப்படுத்துகிறது.

மலச்சிக்கல்

உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குகிறது. ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது. உடலில் ஜீரணமாகாமல் தேவையில்லாத உணவு பொருட்கள் இருந்தால் அவற்றையும் வெளியேற்றுகிறது

எடையிழப்பு

உடல்எடை குறைக்க தேங்காய் தண்ணீர் மிகவும் நல்லது.பசி உணர்வும் எடுக்காது. தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் குடித்து வருபவர்களின் உடல் எடை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகளும் இளநீர் குடிக்கலாம். காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இளநீர் கட்டுப்படுத்துகிறது. பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C, எல் ஆர்ஜினைன் போன்றவை இருப்பதால் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்க செய்கிறது.

கர்ப்பிணிகளுக்கு நல்லதா?

கர்ப்பிணி பெண்கள் தினமும் இளநீரை குடித்து வந்தால், கரு வளர்ச்சிக்கு உதவும்.