தினம் ஒரு கேரட்... இந்த 5 பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்!
By Kanimozhi Pannerselvam
09 Jan 2024, 15:21 IST
நீரிழிவு நோயாளிகளுக்கு கேரட் அதிக நன்மை பயக்கும். அவர்கள் உணவில் கேரட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கேரட்டில் நார்ச்சத்து அதிகம். இது செரிமானத்தை மெதுவாக்க உதவுகிறது. கேரட் உடலில் சர்க்கரையை உறிஞ்சி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர் ஆனால் இவர்கள் தொடர்ந்து கேரட்டை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
இதயம் தொடர்பான நோய்களுக்கு கேரட்டை பலர் சாப்பிட வேண்டும். கேரட்டில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
கேரட்டில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. அதிக நார்ச்சத்து இருப்பதால், கேரட் சாப்பிடுவது பசியை அடக்குகிறது மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கும்.