தினமும் ஒரு டம்பளர் மோர் குடித்தால் உடலுக்கு இவ்வளவு நல்லதா?

By Kanimozhi Pannerselvam
27 Dec 2023, 16:55 IST

இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்கப்படக்கூடிய பானமான மோர், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் புரோபயாடிக் பண்புகள் நிறைந்துள்ளது.

ஆயுர்வேதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது.

கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 12 நிறைந்த மோரில் லாக்டிக் அமிலம் உள்ளது, அத்துடன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன.

நமது செரிமான மண்டலத்திற்கு மோர் ஒரு வரப்பிரசாதம். மோரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதாவது எதை சாப்பிட்டாலும் சரியாக செரிமானம் ஆக வேண்டும். மோர் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

மோர் உட்கொள்வது அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது. உலர்ந்த இஞ்சி அல்லது கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது அதன் பண்புகளை மேலும் அதிகரிக்கும்