ஆரஞ்சு கேரட் பரவலாக எடுத்துக் கொள்ளப்படும் காய்கறி ஆகும். ஆனால், கருப்பு கேரட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், ஆரஞ்சு கேரட்டைப் போலவே கருப்பு கேரட் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒன்றாகும்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
கருப்பு கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் கே, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான அந்தோசயினின்கள் போன்றவை உள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது
செரிமான மேம்பாட்டிற்கு
இதன் நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கங்கலை ஆதரித்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இது மலச்சிக்கல்லைத் தடுக்கிறது
கண்பார்வை ஆரோக்கியத்திற்கு
கருப்பு கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு விழித்திரையின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இது கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது
வீக்கத்தைக் கட்டுப்படுத்த
இதில் உள்ள அந்தோசயினின்கள் உடல் முழுவதும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது இதய நோய், கீல்வாதம், வீக்கம் போன்ற அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
நீரிழிவு நோய்க்கு
கருப்பு கேரட்டில் குறைந்த கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை நிர்ணயிக்க உதவுகிறது